தி.மு.க. பின் வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயல்கிறது, சரத்குமார் குற்றச்சாட்டு


தி.மு.க. பின் வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயல்கிறது, சரத்குமார் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Aug 2017 5:30 AM IST (Updated: 31 Aug 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

மதுரை,

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

அ.தி.மு.க.வில் எடப்பாடி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்துள்ளதால் குழப்பங்கள் ஏற்படுவது இயல்புதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசை கலைக்க கூடாது. அ.தி.மு.க. அரசு 5 ஆண்டுகள் மக்கள் பணியை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அப்படி செய்யாமல் தேர்தலில் வெற்றிபெற்று நேர்மையாக ஆட்சியை பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story