சேலத்தில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் (வயது 37), விஜய் (27). கடந்த மாதம் 9-ந் தேதி அழகாபுரம் பகுதியை சேர்ந்த உமா என்பவர்
சேலம்,
அஸ்தம்பட்டி ஆத்துக்காடு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாலகிருஷ்ணன், விஜய் ஆகிய 2 பேரும் உமாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 3¼ பவுன் நகையை பறித்தனர்.
அப்போது இதை பார்த்து தடுக்க வந்த பொதுமக்களுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பாலகிருஷ்ணன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான அவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே அஸ்தம்பட்டி மற்றும் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளான இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனருக்கு, போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி மற்றும் அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
இதை ஏற்று பாலகிருஷ்ணன், விஜய் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நேற்று உத்தரவிட்டார். பாலகிருஷ்ணன் ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story