திரவ உயிர் உரங்கள் உற்பத்தி மையம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
குடியாத்தம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில் திரவ உயிர்உரங்கள் உற்பத்தி மையம் தொடக்க விழா நடந்தது.
குடியாத்தம்,
குடியாத்தம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில் திரவ உயிர்உரங்கள் உற்பத்தி மையம் தொடக்க விழா நடந்தது. வேளாண்மை இணை இயக்குனர் வாசுதேவரெட்டி தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுபலட்சுமி, கல்விக்குழு உறுப்பினர் வி.ராமு, மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் டி.சிவா, ஆத்மா திட்ட தலைவர் நாகராஜ், சம்பத்நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா திட்ட விளக்கவுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்து கொண்டு ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் வேலூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட திரவ உயிர்உரங்கள் உற்பத்தி மையத்தை திறந்து வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் நாகம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜாமணி, நத்தம் பிரதீஷ், வேளாண்மை அலுவலர்கள் உமாசங்கர், அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி வேளாண்மை இயக்குனர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.