பள்ளிக்கூட பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை


பள்ளிக்கூட பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2017 4:00 AM IST (Updated: 31 Aug 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரிப்பேட்டை தோப்புத்தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 27). இவருக்கும், பொதட்டூர்பேட்டை ஒத்தவாடை தெருவை சேர்ந்த சங்கர் (32) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஹரிஷ் (4) என்ற மகன் உள்ளான். சங்கர் பொம்மராஜுப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பரிமளா பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வுக்கூட உதவியாளராக 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் பரிமளாவுக்கு கர்ப்ப பையில் புண் ஏற்பட்டது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று பரிமளா பக்கத்து தெருவில் உள்ள பெரியம்மா கோகிலா வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு வலி ஏற்பட்டது. இதனால் அவதி அடைந்த பரிமளா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிமளா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை குறித்து அவரது தந்தை அண்ணாதுரை பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story