மதுரவாயலில் ஆடிட்டர் அலுவலக ஊழியரை வெட்டி ரூ.19½ லட்சம் வழிப்பறி
மதுரவாயலில் ஆடிட்டர் அலுவலக ஊழியரை கத்தியால் வெட்டி ரூ.19 லட்சத்து 50 ஆயிரத்தை வழிப்பறி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் டிரங்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் தவமணிகண்டன்(வயது 23). இவர், மதுரவாயலில் உள்ள தனியார் ஆடிட்டர் அலுவலகத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வருகிறார்.
தவமணிகண்டன், நேற்று மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டுவில் உள்ள தனியார் வங்கியில் இருந்து ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் எடுத்தார். அதை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
மதுரவாயல் மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையோரம் வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 மர்ம நபர்கள், தவமணிகண்டனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.
அவர் பணத்தை கொடுக்க மறுத்ததால் மர்ம நபர்கள், கத்தியால் அவரது கையில் வெட்டி விட்டு, ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 2 ‘செக் புக்குகள்’ இருந்த பையை பறித்துச்சென்று விட்டனர்.
இது குறித்து தவமணிகண்டன் அளித்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மர்மநபர்கள் தாக்கியதில் கையில் காயம் அடைந்த தவமணிகண்டன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வங்கியில் இருந்து தவமணிகண்டன் பணம் எடுப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரை பின்தொடர்ந்து வந்து கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்தனரா? அல்லது தவமணிகண்டனே பணத்தை சுருட்டிவிட்டு வழிப்பறி நடந்தது போல் நாடகம் ஆடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story