திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு கத்திக்குத்து


திருவள்ளூர் அருகே ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை என்ஜினீயருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 1 Sept 2017 3:45 AM IST (Updated: 1 Sept 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த காக்களூர் பாக்கியம் நியூ டவுனை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 70). இவர் பொதுப்பணித்துறையின் இளநிலை என்ஜினீயராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

திருவள்ளூர்,

 இவரது மனைவி பத்மா. இவர் தீயணைப்புத்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமச்சந்திரன் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த எதிர்வீட்டில் வசிக்கும் முருகன் என்கிற பால்கார முருகன், ராமச்சந்திரனிடம் நான் வளர்க்கும் ஆடு, மாடுகள் உன் வீட்டின் எதிரில் செடி, கொடிகளை மேய்ந்தால் ஏன் திட்டுகிறாய் என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன், ராமச்சந்திரனை தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தியால் அவரது வயிறு மற்றும் தோள்பட்டையில் குத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்த அவரது மனைவி பத்மா மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராமச்சந்திரன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

Next Story