மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து வாலிபர் சாவு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் என்கிற ஜெகதீசன் (வயது 35) மாவு மில் நடத்தி வந்தார்.
பள்ளிப்பட்டு,
இவர் நேற்று முன்தினம் பள்ளிப்பட்டு திருமண மண்டபத்தில் நடந்த உறவினர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இரவு 10 மணி அளவில் அவர் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தனது வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் ராஜாநகரம் கிராமத்தில் எல்லையம்மன் கோவில் அருகே சாலை வளைவில் அவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஜெகதீசன் பரிதாபமாக இறந்தார்.
இறந்து போன ஜெகதீசனுக்கு கோமதி என்ற மனைவியும், வினோத், டில்லி என்ற 2 மகன்்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story