தாய், தங்கைக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயற்சி உணவின்றி மூதாட்டி சாவு
கடன் தொல்லையால் தாய், தங்கைக்கு தூக்கமாத்திரை கொடுத்துவிட்டு ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயற்சி செய்தார். உணவின்றி மூதாட்டி இறந்தார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில்நகரை சேர்ந்தவர் மஞ்சுகுமார்(வயது36). இவர் மொபட்டில் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது தாய் ராமாத்தாள்(60), தங்கை பாசமலர்(26), பாட்டி சின்னப்பிள்ளை(90) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சின்னப்பிள்ளைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் படுத்த படுக்கையாக இருந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜவுளி வியாபாரத்தை மேம்படுத்த 3 பேரிடம் வட்டிக்கு ரூ.90 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார்.
அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதன்காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட மஞ்சுகுமார், குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று தூக்கமாத்திரை வாங்கி வந்து தனது தாய் ராமாத்தாள், தங்கை பாசமலர் ஆகியோருக்கு கொடுத்து சாப்பிட சொன்னார். அவர்கள் தூக்கமாத்திரைகளை சாப்பிட்டவுடன் மஞ்சுகுமாரும் தூக்கமாத்திரை தின்றார். இதனால் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.
இந்தநிலையில் பாசமலருக்கு மயக்கம் தெளிந்தவுடன் சண்முகநாதன் நகரில் உள்ள தனது பெரியம்மா ராஜம்மாளுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். உடனே அவர் விரைந்து வந்து தூக்கமாத்திரை சாப்பிட்ட 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடைந்தனர். இந்தநிலையில் உணவு, தண்ணீர் இல்லாமல் படுக்கையில் கிடந்த சின்னப்பிள்ளை இறந்துகிடந்தார். இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story