தஞ்சையில் சாலையில் குளம்போல் தேங்கியிருந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி
தஞ்சை சாலையில் குளம்போல் தேங்கியிருந்த மழைநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வாளி, பாத்திரங்களை கொண்டு நீரை அகற்றுவது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் உள்ளது. அதே போல அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழையும் பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. ½ மணிநேரத்திற்கு மேல் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
தஞ்சை மாதாக்கோட்டை ரோடு வங்கி ஊழியர் காலனி சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியிருந்தது. சாலையோரம் வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த வடிகாலை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாததால் குளம்போல் தேங்கியிருந்தது. இதனால் அந்த சாலையில் நடந்து சென்றவர்கள் மழைநீரில் மிதித்து தான் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். நேற்று அந்த வழியாக பள்ளி மாணவிகள் சிலர் நடந்து சென்றபோது, தேங்கியிருந்த நீரில் இருசக்கர வாகனங்கள் சென்றதால் நீர் சிதறி மாணவிகளின் சீருடைகள் மீது பட்டது இதனால் சீருடையின் நிறம் மாறியதால் அவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வாளி, பாத்திரங்கள், மண்வெட்டியுடன் வந்து நீரை அப்புறப்படுத்தும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது, எப்போது மழை பெய்தாலும் இதே நிலை தான். சாலையோரம் வடிகால் வசதி இருக்கிறது. ஆனால் அது எந்த பயனும் இல்லாத வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் சாலையில் குளம்போல் தேங்கி இருக்கிறது. பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக தான் மழைநீரை நாங்களே அகற்றுவது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டோம். நீர் முழுவதையும் வாளி, பாத்திரங்களை கொண்டு அகற்ற முடியாது. பொக்லின் எந்திரத்தை கொண்டு வந்து வடிகால் வசதியை ஏற்படுத்தினால் மட்டுமே மழைநீர் தேங்குவதை தடுக்க முடியும். 3 நாட்களுக்கு மழைநீர் தேங்கி நின்றதால் அதில் பல்வேறு நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது என்றனர்.

Related Tags :
Next Story