சூளகிரி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்: பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் பலி


சூளகிரி அருகே  கன்டெய்னர் லாரி மீது கார் மோதல்: பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் பலி
x
தினத்தந்தி 1 Sept 2017 8:30 AM IST (Updated: 1 Sept 2017 3:05 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் பெங்களூரு தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக இறந்தார்.

சூளகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.டி. நகரைச் சேர்ந்தவர் ஷாமஸ் தப்ரேஸ் (வயது 37). இவர் பெங்களூருவில் ஓசூர் சாலையில் பொம்மசந்திரா என்னும் இடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பதர் பாத்திமா என்ற மனைவியும், ஆயிஷா(8) என்ற மகளும், முகமது ரேஹான் (5) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் ஷாமஸ் தப்ரேஸ் நேற்று தனது காரில் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்தார். சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பக்கமாக வந்த போது கார் சாலையோரமாக நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் ஷாமஸ் தப்ரேஸ் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

மேலும் விபத்தில் பலியான ஷாமஸ் தப்ரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story