கோலாப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து; கணவன்– மனைவி பலி
கோலாப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்– மனைவி பரிதாபமாக பலியானார்கள்.
கோலாப்பூர்,
கோலாப்பூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்– மனைவி பரிதாபமாக பலியானார்கள்.
தம்பதிகோலாப்பூர் உத்தரேஸ்வர் பேத் அருகே உள்ள கோந்தாலி கலி பகுதியை சேர்ந்தவர் அன்வர் சேக் (வயது 55). இவரது மனைவி ஆசிபா (48). இவர்கள் நேற்று கோலாப்பூரில் இருந்து புனே நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் தம்பதியுடன் மேலும் 3 பேர் இருந்தனர்.
கோலாப்பூர் அருகே உள்ள ஹத்கனங்களே பகுதியை அடுத்த தோப் கிராமம் அருகே கார் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது. இதனால், சாலை தடுப்பு சுவரில் மோதி 3 முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாவுஇந்த கோர சம்பவத்தில் காரில் இருந்த தம்பதி உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அன்வர் சேக்கும், அவரது மனைவி ஆசிபாவும் பரிதாபமாக உயிர் இழந்தனர். மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.