தன்னையே அர்ப்பணிக்கும் தென்னை!
‘பூலோக கற்பகத்தரு’ என்று பனை மரம் போற்றப்பட்டாலும், உலகின் நிஜ கற்பகத் தருவாக விளங்குவது தென்னைதான்.
‘பூலோக கற்பகத்தரு’ என்று பனை மரம் போற்றப்பட்டாலும், உலகின் நிஜ கற்பகத் தருவாக விளங்குவது தென்னைதான். உலகம் முழுக்க பரவலாக விளைவது மட்டுமல்லாமல் பனைபோலவே அனைத்துப் பாகங்களையும் பயன்பாட்டிற்குத் தந்து உலகை இளைப்பாற செய்கிறது தென்னை. இயற்கை பானமான இளநீர் தொடங்கி, தென்னையின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். “பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு, தென்னையைப் பெற்றால் இளநீரு” என்ற நம் முன்னோர் வாக்கு தென்னையின் பயன்பாட்டு குணத்திற்கு சான்று. நாளைய தினம் (செப்டம்பர் 2) உலக தென்னை தினமாகும். இந்த நாளில் தென்னையின் மகிமையை தெரிந்து கொள்வோம்...
* வரலாறு அறிய முடியா பழமை கொண்டது தேங்காய். தெற்கு பசிபிக் பகுதியான நியூ கினியாவில் இருந்து, கடலில் மிதந்து வந்த தேங்காய்களே இந்திய பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க கடற்கரை பகுதிகளில் தென்னை பரவ காரணம் என்று விஞ்ஞானிகள் யூகித்திருக்கிறார்கள்கள்.
* தேங்காய்க்கு ‘கோகோநட்’ என்ற பெயரைச் சூட்டியவர் வாஸ்கோடகாமா. உலகம் சுற்றிய அவர் தேங்காய்களை இங்கிலாந்திற்கு அறிமுகம் செய்தார். அவர் அதற்கு ‘கோகோ’ என்று பெயர் வழங்கியிருந்தார். அந்த ஸ்பானிஷ் மொழிச் சொல்லுக்கு ‘மூடிய முகம்’ என்று பொருள். அது பருப்பு வகையுடையதாக விளங்கியதால் பிற்காலத்தில் ‘நட்’ என்ற பிற்சேர்க்கையும் இணைந்து கோகோநட் என்று வழங்கப்பட்டது.
* தேங்காய் எண்ணெயே உலகில் மிகுதியாக பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். 1960-க்குப் பிறகு இந்த இடத்தை சோயாபீன் எண்ணெய் கைப்பற்றிக் கொண்டது.
* உலகம் முழுவதும் ஆண்டிற்கு 20 லட்சம் கோடி தேங்காய்களுக்கு மேல் உற்பத்தி செய்யப்படுகிறது.
* தேங்காய் எண்ணெய் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது. எளிதில் ஜீரணமாவதுடன், அதிக ஆற்றல் தரக்கூடியது. உடல் வளர்ச்சிதை மாற்றத்துக்கும் துணை புரியக்கூடியது. சுரப்பிகளை தூண்டும் பொருட்கள் தேங்காயில் உள்ளன.
* முடிகளின் மறுவளர்ச்சியை தூண்டும் பொருட்கள் இருப்பதால்தான் நாம் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்க்கிறோம். இதனால் வயது முதிர்ச்சி அடைவதும் சற்றே கட்டுப்படுத்தப்பட்டு புத்துணர்ச்சியும், பொலிவும் தருகிறது.
* தேங்காயில் இருந்து பால், நெய், எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் பருப்பு அப்படியே குழம்பில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் நார்களில் இருந்து கயிறு திரிக்கப்படுகிறது. தேங்காய் ஓடான சிரட்டை மற்றும் ஓலைகளில் இருந்து கலைப்பொருட்கள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத தேங்காய் ஓடுகளில் சிற்பங்கள் செதுக்கப்படுவதும், ஓவியங்கள் தீட்டப்படுவதும் வாடிக்கை.
* இளநீர் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிரம்பியது. மனிதனுக்கு கிடைத்த இயற்கை பானங்களில் இளநீர் முதன்மையான இடம் பெறுகிறது. இளநீர் உடனடி ஆற்றல் தரவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ஜீரணத்திற்கும் உதவுகிறது. இதயம் மற்றும் நோய்த்தடுப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. கர்ப்பிணிகளுக்கு திரவ இழப்பு ஏற்படாமல் இருக்க இளநீர் பெரிதும் உதவுகிறது.
* இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகில் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். இந்தியா தேங்காய் உற்பத்தியில் மூன்றாமிடம் வகிக்கிறது.
* 2007-ம் ஆண்டு 5 ஆயிரத்து 567 பேர் சேர்ந்து தேங்காய் சிரட்டைகளைக் கொண்டு ஓசையெழுப்பி இசைக்கச்சேரி செய்தது உலக சாதனையாக பதிவாகி உள்ளது.
* இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தேங்காய் ஓட்டிற்குள் மறைத்து வைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன. போரில் காயமடைந்த வீரர்களின் ரத்த இழப்பை ஈடு செய்யும் வகையில் பிளாஸ்மா மாற்று சிகிச்சைக்கு இளநீர் பயன்படுத்தப்பட்டது.
* பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் மார்ககோஸ், மணிலாவில் தேங்காய் மாளிகையை கட்டினார். தென்னை மரம் மற்றும் தென்னை மரப் பொருட்களால் கட்டப்பட்டு அழகுற அலங்கரிக்கப்பட்டது இந்த தேங்காய் மாளிகை.
* உலகம் முழுவதும், தலையில் தேங்காய் விழுவதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகிறார்கள். நியூகினியாவில் அதிகபட்சமாக 1984-ம் ஆண்டில் 2.5 சதவீதம் பேர் தேங்காய் விழுந்து காயமடைந்ததாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
* மத்திய பசிபிக் கடல் தீவு நாடான கிரிபாதி, தனது ராணுவ வீரர்களுக்கு தேங்காய் நாரில் உறுதியாக செய்யப்பட்ட கவச உடைகளை தயாரித்து வழங்கி உள்ளது.

Related Tags :
Next Story