93 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அமைச்சர் பேட்டி


93 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2017 4:15 AM IST (Updated: 2 Sept 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

93 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.

வண்டலூர்,

தமிழகம் முழுவதும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 13-வது சுற்று கோமாரி தடுப்பூசி மருத்துவ முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த கொருங்கதாங்கல் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி மருத்துவ முகாமை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று தொடக்கி வைத்தார்.
முகாமில் கால்நடைகளுக்கு மருத்துவர்கள் கோமாரி தடுப்பூசிகளை போட்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் 93 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மட்டும் 4½ லட்சம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படும், கால்நடை வைத்துள்ளவர்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், கால்நடைத்துறை செயலாளர் கோபால், மண்டல துணை இயக்குனர் பின்டென், உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொத்தேரி அருகே உள்ள காட்டுப்பாக்கம் கோழிப்பண்ணை ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு அதிக அளவு புதர் மண்டி செடிகள், முள்புதர்கள் காடுபோல் வளர்ந்து இருந்தது. இதனை பார்த்த அமைச்சர், ஆராய்ச்சி நிலையத்தை இப்படி வைத்து உள்ளர்களே என்று கேட்டார். அப்போது அதிகாரிகள் பதில் கூறமுடியாமல் இருந்தனர். செடிகள், முள்புதர்களை அகற்ற வேண்டும் என்று அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன் பின்னர் அதே பகுதியில் கோழிபண்ணை ஆராய்ச்சி நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள தமிழக அரசின் விலங்கு அறிவியலுக்கான முதுநிலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story