சமையல் செய்தபோது உடலில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு


சமையல் செய்தபோது உடலில் தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 2 Sept 2017 3:45 AM IST (Updated: 2 Sept 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு அடுத்த பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகமது ஆரிப். இவரது மனைவி பானு (வயது 35).

மதுராந்தகம்,

இவர் கடந்த 29–ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீப்பிடித்தது. இதனால் பானு அலறி துடித்தார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பானு நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சூனாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story