திருநின்றவூரில் சாலை பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மீன்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை பள்ளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் மீன்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆவடி,
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கம்பர் நகர், ஈஸ்வரி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் போதுமான சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பகுதிகளில் சாலைகள் போடப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.
மழை காலங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நின்ற மழைநீரில் மீன் பிடித்தும் நாற்று நட்டும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தகவல் அறிந்து வந்த பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக சாலைகள் சீரமைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Tags :
Next Story