அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், அரசு முதன்மை செயலாளருமான பனீந்திர ரெட்டி தலைமையில் நடந்தது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் கைத்தறி, கைத்திறன், துணிநூல், கதர் துறை அரசு முதன்மை செயலாளருமான பனீந்திர ரெட்டி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், சந்திரகாசி எம்.பி., ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் ஆகியோர் பேசினர். மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா வரவேற்று பேசினார்.
கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களிடம் துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பனீந்திர ரெட்டி கேட்டறிந்தார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், கோட்டாட்சியர்கள் (அரியலூர்) மோகனராஜன், டினாகுமாரி (உடையார்பாளையம்) மற்றும் அனைத்துத் துறை அலு வலர்கள் கலந்து கொண் டனர்.

Related Tags :
Next Story