வெள்ளத்தில் சிக்கியவர்கள் ‘நோய் எதிர்ப்பு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்’ மும்பை மாநகராட்சி அறிவுறுத்தல்
வெள்ளத்தில் சிக்கியவர்கள் ‘நோய் எதிர்ப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும்’ என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
மும்பை,
வெள்ளத்தில் சிக்கியவர்கள் ‘நோய் எதிர்ப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும்’ என மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
எலி காய்ச்சல் அபாயம்மும்பையில் கடந்த 2005–ம் ஆண்டு வரலாறு காணாத அளவிற்கு பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சுமார் 3 நாட்களுக்கு மேலாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி இருந்தது. சாக்கடை கழிவுகள், கால்நடை கழிவுகள் நிறைந்த அசுத்தமான வெள்ளநீரில் நடந்து சென்ற மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 66 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த முறையும் வெள்ளத்தால் எலிகாய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
நோய் எதிர்ப்பு மருந்துஎனவே பொதுமக்கள் உடனடியாக ‘டாக்சிசிலின்’ என்ற நோய் எதிர்ப்பு மருந்தை 200 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளுமாறு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. வெள்ள நீரில் நடந்து சென்றவர்களின் கால்களில் வெட்டுக்காயங்கள் எதுவும் இருந்தால் அவர்கள் ஒருநாளில் 3 முறை ‘டாக்சிசிலின்’ மருந்தை எடுத்து கொள்ளவேண்டும். எலிக்காய்ச்சல் நோய் எதிர்ப்பு மருந்து மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பாக கர்ப்பிணிகள், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் நோய் எதிர்ப்பு மருந்து சாப்பிட வேண்டும். இவர்கள் ‘அசித்ரோமிசின்’ என்ற மருந்தை 250 மில்லி கிராம் சாப்பிடவேண்டும்.
இந்த தகவலை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.