மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டரின் சாவு குறித்து விசாரணை மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவு

மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டரின் சாவு குறித்து விசாரணை மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் உத்தரவு
x
தினத்தந்தி 2 Sept 2017 4:06 AM IST (Updated: 2 Sept 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டரின் சாவு குறித்து விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டார்.

மும்பை,

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டாக்டரின் சாவு குறித்து விசாரணை நடத்த மும்பை மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டார்.

டாக்டர் சாவு

மும்பையில் உள்ள பாம்பே ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர் தீபக் அம்ரபுர்கர் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த மழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காரை நடுவழியில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

எல்பின்ஸ்டன் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக பாதாள சாக்கடையில் தவறிவிழுந்த அவர், உயிருக்காக போராடினார். எனினும், அவரை காப்பாற்ற முடியவில்லை. ஒர்லி கடல் பகுதியில் நேற்று முன்தினம் பிணமாக மீட்கப்பட்டார்.

விசாரணைக்கு உத்தரவு

பிரபல குடல் நோய் நிபுணரான டாக்டர் தீபக் அம்ரபுர்கரின் இறப்பு பாம்பே ஆஸ்பத்திரி டாக்டர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவரது சாவுக்கான காரணம் குறித்தும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாத வண்ணம் அவற்றை தடுப்பதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூடுதல் கமி‌ஷனருக்கு (கிழக்கு புறநகர்) மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.

Next Story