நாகர்கோவிலில் கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லூரி கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும்
நாகர்கோவில் கோணத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கலை கல்லூரி கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வடசேரி நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவ-மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததால் கோணத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன் திறக்கப்படுவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கட்டிடம் திறக்கப்பட வில்லை. இதனால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைத்தனர். எனவே புதிய கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவ- மாணவிகள் நேற்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்பறைகள் ஒவ்வொன்றும் காற்றோட்ட வசதி இல்லாமலும், மாணவ-மாணவிகளுக்கு துயரமான சூழ்நிலையிலும் உள்ளது. போதிய மேஜை, நாற்காலிகளும் இல்லை. மேலும், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். இந்த கல்லூரிக்காக கோணத்தில் ரூ.7½ கோடி செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே மாணவ-மாணவிகளின் துயரத்தை போக்க துரித நடவடிக்கை மேற்கொண்டு புதிய கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story