குலசேகரன்பட்டினத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் சாவு
குலசேகரன்பட்டினத்தில், காம்பவுண்டு சுவர் அமைக்க பள்ளம் தோண்டியபோது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முப்பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்காண்டி. இவரது வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் குலசேகரன்பட்டினம் அண்ணா சிலை தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான செல்வம் (வயது 49), ராஜா (35) ஆகிய இருவரும் ஈடுபட்டு இருந்தனர்.
நேற்று மாலையில் மூக் காண்டி வீட்டுக்கும், அருகில் உள்ள அவருடைய தாயார் சுப்பம்மாள் வீட்டுக்கும் இடையில் காம்பவுண்டு சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது சுப்பம்மாள் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டு பள்ளம் தோண்டுவதை பார்த்து கொண்டிருந்தார்.
சுப்பம்மாளின் வீடு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வீடு ஆகும். அதன் அருகில் ஆழமாக பள்ளம் தோண்டியதால், சுப்பம்மாள் வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென்று இடிந்து செல்வம், ராஜா ஆகிய இருவர் மீதும் விழுந்து அமுக்கியது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று கட்டிட இடிபாடுகளை அகற்றி படுகாயம் அடைந்த செல்வம், ராஜா ஆகிய இருவரையும் மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக உடன்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த ராஜாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ராஜாவும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்த செல்வம், ராஜா ஆகிய இருவரின் உடல்களையும் குலசேகரன்பட்டினம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த ராஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருக்கு சுமதி என்ற மனைவியும், 1½ வயதில் ஆதிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இறந்த செல்வத்துக்கு மஞ்சுளா என்ற மனைவியும், தீபா என்ற மகளும் உள்ளனர்.
காம்பவுண்டு சுவர் அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story