டாக்டர் முத்துலட்சுமி: சாதித்துக் காட்டிய மாதரசி!
முத்துலட்சுமியின் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது? அவர் டாக்டர் பட்டம் வாங்கிய நாளில் என்ன நடந்தது? பட்டம் வாங்கிய பிறகும் நேர்ந்த அவமரியாதை என்ன? வாருங்கள் ரகசியங்களை அறிவோம்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றிய தகவல்களை இத்தொடரில் பார்த்து வருகிறோம். மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்களின் மதிப்பை அவர் எப்படி பெற்றார் என்பதைப் போன வாரம் தந்திருந்தோம். அப்போது முத்துலட்சுமியின் வீட்டுச் சூழல் எப்படி இருந்தது? அவர் டாக்டர் பட்டம் வாங்கிய நாளில் என்ன நடந்தது? பட்டம் வாங்கிய பிறகும் நேர்ந்த அவமரியாதை என்ன? வாருங்கள் ரகசியங்களை அறிவோம்.
சென்னை மருத்துவக் கல்லூரி கொண்டாடும் முதல் இந்திய மாணவியாக முத்துலட்சுமி இருந்தாலும் அவரது வீட்டில் நிலைமை வேறு மாதிரி இருந்தது. அதைப்பற்றி முத்துலட்சுமியே சொல்கிறார்...
‘அந்த நாட்களில் பெண்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்குக் கிறித்துவ விடுதிகள் தவிர வேறு விடுதிகள் கிடையாது. கிறித்துவ மதமாற்றம் அப்போது சாதாரண நிகழ்ச்சியாக இருந்தது. எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கிறித்துவ விடுதிகளுக்கு அனுப்ப விரும்பவில்லை. இதனால்தான் எனது ஏழைப்பெற்றோர் சென்னையில் தனிக்குடும்பம் வைக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர்கள் கடன்படவும் வேண்டியிருந்தது. புரசைவாக்கத்தில் என் அப்பாவின் மாணவரான பி.எஸ்.கிருஷ்ணசாமி தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு வீடு பிடித்து கொடுத்தார். என் அப்பா புதுக்கோட்டைக்குச் சென்றபோதெல்லாம் அவர்கள் குடும்பம் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். கல்லூரியில் மற்ற மாணவர்களுக்கு அவரவர் வீடுகளில் இருந்தோ, ஒய்.எம்.சி.ஏ விடுதியில் இருந்தோ நல்ல மதிய சாப்பாடு வந்தது. ஓய்வு அறையில் குறைவான விலையில் கிடைத்த அரை அணா பன் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகியவையே என் மதிய உணவாக இருந்தது. (அரை அணா என்பது இப்போதைய மதிப்பில் 3 பைசா) காபி, டீ பழக்கமில்லாததால் அவை எனக்குப் பிடிக்காதவையாக இருந்தன’.
சென்னையில் முத்துலட்சுமியின் மருத்துவப்படிப்பு, இப்படி நகர்ந்து கொண்டிருந்த போது அவரைத் திரு மணம் செய்து கொள்ள நிறைய வரன்கள் தேடி வந்தன. இப்போதாவது திருமணத்தை நடத்திவிட வேண்டும் என அவரது அம்மா துடியாய் துடித்தார். ‘படிப்பை நன்றாக முடித்து சிறந்த டாக்டராகிட வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும் என் சிந்தனையில் இல்லை’ என்று முத்துலட்சுமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.
‘மேலும் வயதுக்கு வந்திருந்த இளைய தங்கையையும், தம்பியையும் சென்னையில் படிக்க வைக்க வேண்டும் என்று அப்பாவிடம் முத்துலட்சுமி சொல்லிவிட்டார். அவர்களும் சென்னை வந்தார்கள். இதனால் அவரது அம்மாவும் சென்னை வர வேண்டி இருந்தது.
‘இத்தனை வயதான பிறகும் தன் மகள்கள் யாருக்கும் திருமணம் ஆகவில்லையே’ என்று முத்துலட்சுமியின் அம்மா புலம்பியபடியே இருந்தார். நாராயணசாமியிடம் கடுமையாக சண்டை போட்டார். கிட்டதட்ட மன நோயாளி போலவே ஆகிவிட்டார். குடும்பத்தின் நிதி நிலைமையும் சரியாக இல்லை.
குடும்ப சூழலோடு சேர்த்து உடல்நிலையும் முத்து லட்சுமியைப் படுத்தி எடுத்தது. வெப்ப மண்டல பகுதியான புதுக்கோட்டையில் இருந்துவிட்டு, கடலோர நகரமான சென்னையின் தட்பவெப்பநிலை ஆஸ்துமா நோயாளியான அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பல இரவுகள் தூக்கம் இல்லாமல் தவித்தார். பின்னிரவில் தூங்கிவிட்டு அதிகாலையில் எழுந்து கிளம்பி கல்லூரிக்கு ஓடுவார். அடிக்கடி ஜூரமும் வந்தது.
மெட்ரிகுலேசன் தேர்வின் போதே கிட்டப்பார்வை ஏற்பட்டு, அதற்குச் சரியான சிகிச்சை எடுக்காததால் பார்வை பாதிப்பு அதிகமானது. சென்னையில் கண் மருத்துவரிடம் காண்பித்து கண்ணாடி போட்டுக் கொண்டார்.
உடல்நிலை பாதிப்பை அம்மாவிடம் சொன்னால் எங்கே படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்குப் போகலாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் வேறு அவருக்கு இருந்தது.
ஒரு வழியாக மூன்றாவது ஆண்டு படிக்கும் போது, அவரது அம்மா ஊருக்கு போனார். அப்பா நாராயணசாமி அய்யர் வந்து மகளுடன் அதிக நாட்கள் தங்கினார்.
அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து மகளுக்குத் தேவையானவற்றை எல்லாம் அவர் செய்து தருவார். பல நாட்களில் காலை உணவை அவர்தான் தயார் செய்வார். கல்லூரியின் முதல்வராக இருந்தவர் என்பதையெல்லாம் ஓரங்கட்டி வைத்து விட்டு, ஒரு தந்தையாக மட்டுமின்றி தாயின் இடத்திலிருந்தும் அவர் கொடுத்த அன்பு, அரவணைப்பு எல்லாம் முத்துலட்சுமியை உற்சாகமாக படிக்க வைத்தன.
மகளுக்கு உடற்பயிற்சியும் பொழுதுபோக்கும் தேவை என்பதை உணர்ந்து தினமும் இரண்டு மைல் வரை நடைபயிற்சி அழைத்துச் சென்றார். மகளுக்குத் தேவையான நாட்டு மருந்துகளை வீட்டில் எப்போதும் வாங்கி வைத்திருப்பார். மகளின் படிப்பு மீதான பெருமிதமும், அவள் பெரிய சாதனை புரிய போகிறார் என்ற ஆகப்பெரிய நம்பிக்கையும் நாராயணசாமி தன் நண்பர்களிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்படும்.
தந்தையின் அன்பும், முத்துலட்சுமியின் அயராத உழைப்பும் அவரை டாக்டர் படிப்பு முடித்த முதல் இந்தியப் பெண்மணியாக உருவாக்கின.
1912-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் முத்துலட்சுமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. ஒரு காலத்தில் மாணவிகளைத் தன் வகுப்பில் அனுமதிக்காத கர்னல் ஜிப் போர்டு விழாவுக்கு தலைமை வகித்து பேசினார்.
‘சென்னை மருத்துவக்கல்லூரியின் வரலாற்றில் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது. ஓர் இந்து பெண், மிக உயர்ந்த மருத்துவப்பட்டத்தை 5 ஆண்டுகளுக்குள்ளேயே, பல பதக்கங்களுடனும் பெரும் பாராட்டுகளுடனும் பெற்றிருப்பது பெரிய சாதனை. நாட்டிலுள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ உதவி செய்ய நிறைய பெண்கள் இனிமேல் மருத்துவக் கல்லூரியில் சேருவார்கள் என்று நான் நம்புகிறேன்’.
பேராசிரியரின் வார்த்தைகள் அவரது ஆழ் மனதில் இருந்து வந்தன. ஏனென்றால் ஆண்களில் பலரே மருத்துவப்படிப்பை 5 ஆண்டுகளில் அன்றைக்கு முடித்ததில்லை. எல்லாப் பாடங்களிலும் தனித்தனியாக 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால்தான் அப்போது பட்டம் வாங்க முடியும். எனவே முத்துலட்சுமியின் சாதனை இந்தியா முழுக்கவும் பேசப்பட்டது.
பட்டம் வாங்கிய உடையுடன் அவர் காட்சி அளிக்கும் படம் எல்லா பத்திரிகைகளிலும் பளிச்சென பிரசுரமானது. வாழ்த்துக் கடிதங்களும், பணி புரிவதற்கான அழைப்புகளும் குவிந்தன.
சென்னை எழும்பூர் பெண்கள் குழந்தைகள் மருத்துவ மனையின் முதல் பெண் பயிற்சி மருத்துவராக முத்துலட்சுமி நியமிக்கப்பட்டார். அதுவரை அங்கு பெண் டாக்டர்களே கிடையாது. மேலும் பயிற்சி மருத்துவர் நியமிக்கும் முறையும் அதற்கு முன் கிடையாது. இதற்காக கர்னல் ஜிப் போர்டு தனியாக அரசுக்கு எழுதி அனுமதி வாங்கினார்.
அங்கேயும் முத்துலட்சுமிக்குச் சோதனை காத்திருந்தது. ஆங்கிலேய செவிலியர்கள் முதல் இந்திய பெண் டாக்டரின் ஆணைகளுக்கு கீழ்படிய விரும்பவில்லை. ‘நீ டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் பெரிய இவளா? ஓர் அடிமை இந்தியப் பெண்தானே’ என்று அலட்சியம் செய்தார்கள்.
தமது திறமையால் அவர்களின் மனங்களை வென்றெடுத்த முத்துலட்சுமி, மருத்துவர் பயிற்சியை முடித்துவிட்டு புதுக்கோட்டைக்குப் போனார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார்.
பல இடங்களில் இருந்து வந்த அழைப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, சொந்த ஊரில் சேவை செய்ய சென்ற வருக்கு அங்கே குடைச்சல் கொடுத்தார்கள். மருத்துவ அலுவலரும், மருந்து தயாரிப்பாளரான ஆங்கிலோ இந்திய பெண் ஒருவரும் சேர்ந்து முத்துலட்சுமிக்கு நாள் தோறும் தலைவலி தந்தார்கள்.
வேறு வழியின்றி 1914-ல் சென்னைக்கு வந்து சிறிய மருத்துவமனையைச் சொந்தமாக ஆரம்பித்தார். நாளடைவில் சென்னை மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.
முத்துலட்சுமியின் குணநலன்களையும், சாதனைகளையும் அறிந்த சுந்தர் ரெட்டி எனும் டாக்டர் அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பி கடிதம் எழுதி இருந்தார்.
விசாகப்பட்டினத்தில் வேலை பார்த்து வந்த அவர், குழந்தை மருத்துவத்திலும், அறுவை சிகிச்சையிலும் உயர் படிப்புகளை முடித்திருந்தார்.
அவரின் வாழ்க்கையிலும் போராட்டங்கள் நிறைந்திருந்தன. 16 வயதில் வீட்டைவிட்டு வெளியேறி மிகவும் இன்னல்களை அனுபவித்தே படித்திருந்தார்.
இத்தனைக்கும் விடுதலைக்கு முந்தைய சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக இருந்த சுப்பராயலு ரெட்டி, சுந்தரின் தாய் மாமன். ஆனால் தன் விருப்பப்படி சுந்தர் திரு மணம் செய்து கொள்ளாததால் வெளிநாட்டு படிப்பு உள்ளிட்டவற்றுக்கு சுப்பராயலு உதவ மறுத்துவிட்டார்.
26 வயதில் இருந்த முத்துலட்சுமி அப்போதும் திருமணத்தை வெறுத்தார். இந்த முறை தாயோடு சேர்ந்து தந்தையும் மணம் புரிந்து கொள்ள வற்புறுத்தினார். ஏழெட்டு முறை சுந்தர் ரெட்டியைப் பார்த்து பேசிய பிறகே திருமணத்திற்கு முத்துலட்சுமி ஒப்புக்கொண்டார்.
1914-ல் சென்னையில் வைத்து பிரம்ம சமாஜ சட்டப்படி இருவருக்கும் திரு மணம் நடந்தது. அதுவரை டாக்டர் முத்துலட்சுமியாக இருந்தவரின் பெயருக்குப் பின்னால் அதன் பிறகு ‘ரெட்டி’ என்பதும் சேர்ந்து கொண்டது.
வெளிநாட்டு படிப்பு உள்ளிட்டவற்றால் சுந்தர் ரெட்டிக்கு இருந்த கடன்களை அடைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நாராயண சாமி அய்யர் புதுக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் பணியை அவருக்கு வாங்கிக்கொடுத்தார். அவரோடு சேர்ந்து முத்துலட்சுமியும் சேர்ந்து புதுக்கோட்டைக்குப் போனார். இதற்குள்ளாக மிகவும் கடினமான பிரசவத்தில் முத்துலட்சுமிக்கு முதல் ஆண் குழந்தை பிறந்திருந்தது.
ரெட்டியின் கனவு வேலையான மருத்துவக்கல்லூரி பேராசிரியர் பணியிடம் காலியாக இருந்ததால் புதுக்கோட்டை வேலையை விட்டு விட்டு 1916-ல் குடும்பம் மீண்டும் சென்னைக்குச் சென்றது. அடுத்த சில ஆண்டுகளில் நல்ல சம்பாத்தியம், பங்களா வாழ்க்கை எல்லாம் சென்னையில் சாத்தியமானது. இன்னொரு ஆண் மகனையும் பெற்றெடுத்தார். தம்பி, தங்கைகளை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து திருமணம் செய்து வைத்தார்.
மருத்துவ தொழிலில் வெற்றியாளராக திகழ்ந்தாலும் பொது சேவையிலும் ஈடுபாடு காட்டினார். தன் குடும்பம் மட்டும் சிறந்திருந்தால் போதாது தன்னைப் போன்று நிறைய பெண்கள் சமூகத்தில் மேலெழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பினார்.
அப்போது முத்துலட்சுமியை இடி போல தாக்கிய இழப்பு ஒன்று நேரிட்டது. அது என்ன? வாழ்வின் சிகரம் என்று சொல்வதைப் போல முத்துலட்சுமி செய்த சாதனைகள் என்னென்ன? அவரது கடைசி காலம் எப்படி இருந்தது?
ஆடையில் எளிமை
சிறு வயது முதலே புடவைகள், நகைகள் மீது முத்துலட்சுமிக்கு ஆர்வம் கிடையாது. சாதனை புரிந்த மருத்துவராக, சட்டமன்ற உறுப்பினராக, இந்திய மாதர் சங்கத்தலைவியாக திகழ்ந்த போதும் சாதாரண நூல் புடவையே உடுத்தினார். மிக எளிமையான வாழ்க்கை முறைகளை வைத்திருந்தார். வட்ட மேஜை மாநாடு போன்ற மேலை நாட்டு நிகழ்வு களுக்குப் போகும் போதும் அதே எளிமையுடன் தான் சென்றார். அந்த எளிமையே கடைசி வரை முத்துலட்சுமியின் வலிமையாக அமைந்தது.
வாழ்வா, சாவா போராட்டம்!
ஒரு டாக்டராக இருந்தும் முத்துலட்சுமியின் முதல் பிரசவம் அவருக்கு வாழ்வா, சாவா போராட்டமாக மாறியது. ஒன்பதாவது மாதத்தின் போது வீட்டில் நடந்த ஒரு சண்டையில் தலையிட்டதால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது. கூடவே பிரசவ வலியும் ஏற்பட்டது. 7 நாட்கள் இந்த நிலை தொடர்ந்தது. பொறுமை இழந்த மருத்துவ உதவியாளர் அவசரப்பட்டு போட்ட ஊசியால் கர்ப்பபையின் மிருதுவான தசை கிழிந்தது. ஆனால் பிரசவம் நடக்கவில்லை. அடுத்த சில மணி நேரங்களில் குழந்தை வெளியே வராவிட்டால் தான் இறந்துவிட நேரிடும் என்று முத்துலட்சுமிக்குத் தெரிந்துவிட்டது. தமது கணவரையும் அப்போது புகழ் பெற்ற டாக்டராக இருந்த ஏ.எல்.முதலியாரையும் அழைத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கச் சொன்னார். அதற்கான ஏற்பாடுகள் செய்யும் போது சுந்தர் ரெட்டி வழுக்கி விழுந்தார். மிகப்பெரிய நிபுணரான டாக்டர் முதலியார், அந்த இடைவெளியில் தமது அனுபவத்தின் மூலம் ஆயுதம் பயன்படுத்தாமல் குழந்தையை வெளியே எடுத்தார்.
எழுதிய நூல்கள்
மருத்துவ தொழில், சமூக சேவை, அரசியல், குடும்பம் இவற்றுக்கிடையிலும் புத்தகங்கள் எழுதுவதிலும் முத்துலட்சுமி ஆர்வம் காட்டினார். கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பு, கைக்குழந்தைகளின் உணவு முறை, இந்தியாவில் சிசு மரணம், இந்தியப் பெண்களின் வாக்குரிமை, என் சட்டமன்ற அனுபவங்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, சிறு வயதுத் திருமணத்தின் கேடுகள், எதற்காக தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும்?, புற்றுநோயும் அதைத் தடுக்கும் முறையும் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். 1964–ல் தமது சுயசரிதையையும் ஆங்கிலத்திலேயே முத்துலட்சுமி படைத்தார்.
(ரகசியங்கள் தொடரும்)

Related Tags :
Next Story