ஞாபகமறதி வியாதி அபாயத்தை குறைக்கும் லித்தியம் குடிநீர்


ஞாபகமறதி வியாதி அபாயத்தை குறைக்கும் லித்தியம் குடிநீர்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:30 PM IST (Updated: 2 Sept 2017 4:10 PM IST)
t-max-icont-min-icon

குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் ‘டிமென்சியா’ எனப்படும் ஞாபக மறதி வியாதி ஏற்படும் அபாயம் குறைவதாக டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் ‘டிமென்சியா’ எனப்படும் ஞாபக மறதி வியாதி ஏற்படும் அபாயம் குறைவதாக டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, இயற்கையாகவே லித்தியம் குழாய் நீரில் காணப்பட்டாலும், அதன் அளவு இடத்துக்கு இடம் மாறுபடும்.

குடிநீரில் லித்தியம் அதிக அளவில் இருந்தால் மறதி நோய் ஏற்படும் அபாயம் குறையும். அதேநேரம், குடிநீரில் மிதமான அளவில் லித்தியம் இருந்தால், அது குறைந்த அளவில் லித்தியம் காணப்படும் குடிநீரைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்கிறது ஆய்வு.

எட்டு லட்சம் மக்களிடம் நடத்தப்பட்ட சர்வே அடிப்படையில் செய்யப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவாக வரையறுக்கப்பட்டதாக இல்லை.

ஆனால் இந்த ஆய்வு, மறதி நோயைத் தடுப்பதற்கான ஒரு வழியைச் சுட்டிக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

டென்மார்க் மக்களில் டிமென்சியாவால் பாதிக்கப்பட்ட, பாதிக்கப் படாத ஆயிரக்கணக்கானவர்களின் மருத்துவப் பதிவுகள் கோபன் ஹேகன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. நாட்டின் 151 இடங்களில் குழாய் நீர் சோதனையும் செய்யப்பட்டது.

ஜாமா சைக்கியாட்ரி என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, குறைவான அளவு (லிட்டருக்கு ஐந்து மைக்ரோ கிராமுக்கு கீழே) லித்தியம் உள்ள நீரை பயன்படுத்துபவர்களுக்கு உள்ள டிமென்சியா அபாயத்தைவிட, மிதமான லித்தியம் அளவு கொண்ட நீரைப் பருகுபவர்களுக்கு (லிட்டருக்கு 5.1 மற்றும் 10 மைக்ரோ கிராம்கள் வரை) டிமென்சியா அபாயம் 22 சதவீதம் அதிகமாக இருந்தது.

ஆனால், லித்தியம் அளவு அதிகமாக (லிட்டருக்கு 15 மைக்ரோ கிராம்களுக்கு மேல்) இருக்கும் குடிநீரைப் பயன்படுத்துபவர்களுக்கு டிமென்சியா அபாயம் 17 சதவீதம் குறைவாக உள்ளது.

‘குடிநீரில் உள்ள லித்தியத்துக்கும், ஞாபகமறதி நோய்க்கும் இடை யிலான தொடர்பை ஆய்வு செய்யும் முதல் ஆய்வு இது என்று நினைக் கிறோம்’ என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், ‘நீண்டகாலமாக குடிநீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் அது டிமென்சியா ஏற்படுவதைக் குறைக் கலாம்’ என்கின்றனர்.

Next Story