ஒரே ஒருநாள் செல்போனை பயன்படுத்தாவிட்டால்...


ஒரே ஒருநாள் செல்போனை பயன்படுத்தாவிட்டால்...
x
தினத்தந்தி 2 Sept 2017 5:30 PM IST (Updated: 2 Sept 2017 4:11 PM IST)
t-max-icont-min-icon

இன்றைக்கு செல்போன் போன்ற மொபைல் சாதனங்களுக்கு அடிமையாகாதவர்கள் மிகவும் குறைவு.

ன்றைக்கு செல்போன் போன்ற மொபைல் சாதனங்களுக்கு அடிமையாகாதவர்கள் மிகவும் குறைவு. இவற்றின் அதீதப் பயன்பாட்டினால் மனிதர்களுக்கும், பல்லுயிரினங்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

அந்தப் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ஒரு நாள் முழுவதும் எந்தவிதமான மொபைல் சாதனங்களையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ஒரு நாள், ஒரு வருடம் முழுக்க ஒருவரின் நடத்தையில் நல்லவித தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள டெலிபோனிக்கா அமைப்பும், அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகமும் இணைந்து அந்த ஆய்வை மேற்கொண்டன.

அதற்காக 30 தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் பலரும், மொபைல் சாதனங்களை நிறுத்தி வைப்பதால் தங்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும், அதிகளவு ஓய்வு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

செல்போன் போன்ற நவீன சாதனங்கள் பெரும் வசதிதான். ஆனால் அளவுக்கு மீறினால்...?

Next Story