மாணவி அனிதா தற்கொலை மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாணவி அனிதா தனக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்,
அரியலூர் மாணவி அனிதா தனக்கு மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 110 பேர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story