கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகள் வெள்ளக்காடானது. இந்த கனமழையால் தளி பகுதியில் 15 ஏரிகள் நிரம்பின.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலையும், இரவு வேளையும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி மற்றும் பல இடங்களில் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
பாரூர்-81, தேன்கனிக்கோட்டை-12, ஓசூர்-36, கிருஷ்ணகிரி-17.20, அஞ்செட்டி-8.20, ஊத்தங்கரை-3.40, தளி-50, பெனுகொண்டாபுரம்- 45.20, சூளகிரி-40, நெடுங்கல்-54.20, ராயக்கோட்டை-73, போச்சம்பள்ளி-45.60. மாவட்டம் முழுவதும் மொத்தம் 465.80 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோல மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக பலத்த மழை பெய்தது. கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் மழை விடாமல் பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது. இந்த மழையால் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஓசூரை சுற்றி அத்திமுகம், பேரிகை உள்ளிட்ட பகுதி களில் நெற்பயிர்கள், விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கின. தொடர் மழையால் கிருஷ்ண கிரி மாவட்டத்தில் பொதுமக் களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தேன்கனிக்கோட்டை தாலுகா தளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சனத்குமார் ஏரி, ராஜஏரி, ஈராஜனஏரி, சூடசந்திரம் வீரராஜன் ஏரி, ஜனகுப்பம் ஏரி, மாருப்பள்ளி ஏரி, நஞ்சாரெட்டி ஏரி, செல்லேபுரம் ஏரி, கீரனகுப்பம் உள்ளிட்ட 15 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தளி சுற்று வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக சூடசந்திரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி மறுபகுதிக்கு சென்றது. சனத்குமார் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சூளகிரி அடுத்த செட்டிப்பள்ளியில், பல ஆண்டுக்கு பின் ஏரி நிரம்பி மறுபகுதிக்கு செல்கிறது. உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை பகுதியில் கனமழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தளி சுற்று வட்டார பகுதிகளில் நேற்றும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் மின்சாரம், போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் சாலைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் ஏரிகள் நிரம்பி உள்ளதை தளி சட்ட மன்ற உறுப்பினரும், கிருஷ்ண கிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஒய்.பிரகாஷ், தளி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் ஆகியோர் பார்வை யிட்டனர்.

Related Tags :
Next Story