மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் எழவில்லை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் எழவில்லை மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2017 2:30 AM IST (Updated: 3 Sept 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். தலைவர்கள் அதிருப்தி கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், சில மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்பட

பெங்களூரு,

மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த பிரச்சினையும் எழவில்லை என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தலைவர்கள் அதிருப்தி

கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், சில மந்திரிகளின் இலாகாக்களும் மாற்றப்பட்டது. மந்திரிசபை விரிவாக்கத்தால் முதல்–மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வர் இடையே மோதல் உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் சித்தராமையா மீது மூத்த தலைவர்களுடன் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

குறை சொல்வது தவறானது

மந்திரிசபை விரிவாக்கம் முதல்–மந்திரி சித்தராமையாவின் முடிவுக்கு உட்பட்டதாகும். மந்திரிகளாக யாரை நியமிப்பது, யாருக்கு எந்த இலாகாக்களை ஒதுக்குவது என்பது முதல்–மந்திரியின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதற்காக அவரை குறை சொல்வது தவறானது. மேலும் முதல்–மந்திரி சித்தராமையா மீது குற்றச்சாட்டு கூறுவதும் சரியல்ல. போலீஸ் மந்திரி பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. அதற்கு நான் ஆசைப்படவும் இல்லை. அதனால் போலீஸ் மந்திரி பதவி எனக்கு கிடைக்கவில்லையே என்று, நான் அதிருப்தி அடையவில்லை.

மந்திரிகள் பதவி ஏற்பு விழா நடப்பது பற்றி எனக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க டெல்லி சென்றிருந்தேன். டெல்லியில் இருந்து மாலைக்குள் பெங்களூருவுக்கு திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் தாமதமாகி விட்டதால் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதுதவிர வேறு காரணங்கள் இல்லை. பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது குறித்து முதல்–மந்திரி சித்தராமையாவிடம் தெரிவித்துள்ளேன்.

பிரச்சினை எழவில்லை

மந்திரிசபை விரிவாக்கத்தால் காங்கிரஸ் கட்சிக்குள் எந்த ஒரு பிரச்சினையும் எழவில்லை. அதுபோன்று வெளியாகும் தகவல்கள் தவறானது. மாநில தலைவர் பரமேஸ்வர் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி நீங்கள் (நிருபர்கள்) அவரிடம் தான் கேட்க வேண்டும். மந்திரிசபை விரிவாக்கத்தால் சித்தராமையா மீது மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான தகவலும் தவறானது.

என்னிடம் ரூ.300 கோடி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர் வெளியிடட்டும். ஆதாரங்களை வெளியிட்டு அவர் பேசினால், அதற்கு பதிலளிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story