தி.மு.க. சார்பில் மாணவி அனிதாவுக்கு நினைவு அஞ்சலி
‘நீட்’ தேர்வினால் மருத்துவ கல்வி படிக்க முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதாவுக்கு
சென்னை,
தி.மு.க. சார்பில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது.
இதையொட்டி அண்ணா அறிவாலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அனிதா உருவப்படத்துக்கு, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, தாயகம் கவி, ப.ரங்கநாதன், கு.க.செல்வம், ரவிச்சந்திரன், பிரசாரக்குழு செயலாளர் சிம்லா முத்துசோழன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் அனிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் துக்கத்தை அனுசரிக்கும் வகையில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். முன்னதாக மாணவி அனிதாவுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அப்போது மத்திய அரசை கண்டித்தும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Related Tags :
Next Story