அரண்வாயல், அம்மம்பாக்கம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம்
அரண்வாயல், அம்மம்பாக்கம், பெரிய ராமாபுரம் ஊராட்சிகளில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் தாசில்தார் கார்குழலி தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார்கள் செந்தில்குமார், மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராமநிர்வாக அலுவலர்கள் சுரேஷ், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, ரேஷன்கார்டு வேண்டியும், ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் என பல்வேறு கோரிக்கைகளை வேண்டி திரளான பொதுமக்கள் மனு அளித்தனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர்கள் கல்யாணசுந்தரி, மணிகண்டன், தனலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்மம்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார். ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை கேட்டு 28 பேர் மனுக்களை கொடுத்தனர். இதில் வருவாய் ஆய்வாளர்கள் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பெரிய ராமாபுரம் ஊராட்சி மற்றும் கோபாலபுரம் ஊராட்சிகளுக்கான அம்மா திட்ட முகாம் கோபாலபுரம் கிராமத்தில் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளிப்பட்டு துணை தாசில்தார் வெண்ணிலா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் திருத்தம், வீட்டுமனை பட்டா, வங்கி கடன், பட்டா மாற்றம், நலத்திட்ட உதவிகள் கோரி 40 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் அனைத்தும் விசாரணைக்காக அந்தந்த துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் ரகுராமன், கிராம நிர்வாக அலுவலர் தாட்சாயிணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.