குருபெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


குருபெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 3 Sept 2017 3:45 AM IST (Updated: 3 Sept 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

குருபெயர்ச்சியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில்,

குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.அதன்படி திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் வடநகர் ஆதிகைலாசநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி சாமிக்கு பால், பழம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோவில் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோவிலில் தட்சிணாமூர்த்தி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கும் , உற்சவ மூர்த்திக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.இதையடுத்து குருபகவானுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலையில் கூட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இலுப்பூர் பொன்வாசி நாதர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story