மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் மத்திய ரெயில்வேயில் வழக்கம் போல இயங்கும்
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய ரெயில்வே வழித்தடத்தில் வழக்கம் போல் ரெயில்கள் இயங்கும்.
பராமரிப்பு பணிமேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள சாந்தாகுருஸ் – கோரேகாவ் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ மின்சார ரெயில்கள் அனைத்தும் விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.
ஆனால் இந்த ரெயில்கள் பிளாட்பார வசதி இன்மை காரணமாக ராம்மந்திர் ரெயில் நிலையத்தில் நிற்காது.
மத்திய ரெயில்வேயில் இல்லைபராமரிப்பு பணி நடக்கும் நேரத்தில் சில மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய ரெயில்வேயின் மெயின் மற்றும் துறைமுக வழித்தடத்தில் இன்று பராமரிப்பு பணி நடைபெறாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மத்திய ரெயில்வே வழித்தடத்தில் வழக்கம் போல மின்சார ரெயில்கள் இயங்கும்.