மத்திய மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா தகவல் அனுப்பவில்லை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சொல்கிறார்
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா எங்களுக்கு தகவல் அனுப்பவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா எங்களுக்கு தகவல் அனுப்பவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
மத்திய மந்திரிசபை விரிவாக்கம்பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. மராட்டியத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பியூஷ் கோயல் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பாரதீய ஜனதாவின் நீண்ட நெடிய கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு தகவல் தெரிவிக்காதது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:–
அதிகார பசி இல்லைஇன்றைக்கு ஒவ்வொருவரும் மத்திய மந்திரிசபை விரிவாக்கத்தில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், நாங்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மும்பை மக்களுக்கு தரமான சுகாதார வசதியை ஏற்படுத்தி தருவதில் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம்.
எங்கள் கட்சியின் கொள்கையே 80 சதவீதம் சமூக சேவை, 20 சதவீதம் அரசியல் என்பது தான். இதனை தான் கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம்.
மத்திய மந்திரிசபை விரிவாக்கம் பற்றி ஊடகம் வாயிலாக தான் நான் அறிந்து கொண்டேன். பா.ஜனதா தலைமையிடம் இருந்து எனக்கு எந்தவொரு தகவலும் வரவில்லை. எங்களுக்கு அதிகார பசி கிடையாது.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.