குரு பெயர்ச்சி விழாவையொட்டி முறப்பநாடு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை
குரு பெயர்ச்சி விழாவையொட்டி முறப்பநாடு சிவன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை,
குருபகவான் நேற்று காலை கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதையொட்டி குரு பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வரும் கோவில்களிலும், சிவன் கோவில்களிலும் நேற்று குருபெயர்ச்சி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கைலாசநாதர்-சிவகாமி அம்பாள் கோவில் உள்ளது. நவ கைலாயத்தில் 5-வது இடத்தை பெற்ற இந்த கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது. குருபகவான் ஆட்சி பெற்று குருஷேத்திரமாகவும் திகழ்கிறது. இந்த கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. நேற்று காலை குருபெயர்ச்சி விழா நடந்தது.
இதையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் தெட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாள், தெட்சிணாமூர்த்தி ஆகியோரை வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாளையங்கோட்டை சிவன் கோவில் எனப்படும் திரிபுராந்தீசுவரர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நெல்லை சந்திப்பு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று குருபெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் தெட்சிணாமூர்த்தியை வழிபட்டனர்.
நெல்லை மேலவீரராகவபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் குரு பெயர்ச்சியையொட்டி குரு பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் நெல்லை பகுதியில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களிலும் நேற்று சிறப்பு யாகசாலை பூஜை நடத்தி குரு பெயர்ச்சி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்னகத்தின் சிருங்கேரி என்று அழைக்கப்படும் புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து ருத்ர ஏகாதசியும், நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. குரு பெயர்ச்சி விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசி, செங்கோட்டையில் இருந்து புளியரைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

Related Tags :
Next Story