கட்டடம் இடிந்து மூன்று குடும்பங்கள் சிக்கின


கட்டடம் இடிந்து மூன்று குடும்பங்கள் சிக்கின
x
தினத்தந்தி 3 Sept 2017 6:06 AM IST (Updated: 3 Sept 2017 6:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகரம் மலைக்கோட்டைக்கு அருகில் தஞ்சைக்குளத்தெருவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.

திருச்சி

திருச்சி நகரம் மலைக்கோட்டைக்கு அருகில் தஞ்சைக்குளத்தெருவில் மூன்று மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இக்கட்டடத்தில் 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. இவர்களில் 10 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இன்று அதிகாலை  மணி அளவில் கட்டடம் இடிந்ததாக தெரிகிறது. நேற்றைய மழையினால் ஈரம் கட்டடத்தினுள் புகுந்து கட்டடம் இடிந்துள்ளதாக தீயணைப்புத்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

இடிபாடுகளை அகற்றியவரை மூன்று அல்லது நான்கு பேர் மட்டுமே கட்டடத்தில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. உயிரிழப்புகள் ஏதும் இருக்காது என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story