நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Sept 2017 3:30 AM IST (Updated: 3 Sept 2017 11:17 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திருப்புவனத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்புவனம்,

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திருப்புவனத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

 இதில் ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் போற்கோ, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story