மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு தான் காரணம் வைகோ பேட்டி


மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு தான் காரணம் வைகோ பேட்டி
x
தினத்தந்தி 4 Sept 2017 6:00 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு தான் காரணம் என்று வைகோ தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய அரசு தான் காரணம். நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கு தமிழக அரசு முழு முயற்சி எடுத்தது. மத்திய அரசு தான் கழுத்தை அறுத்து விட்டது.

நீட் தேர்வு பிரச்சினைக்கு தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும். இணையதளத்தில் ம.தி.மு.க. பெயரை பயன்படுத்தி என்னை விமர்சித்து வருகிறார்கள். இந்த விமர்சனங்களை வைப்பவர்கள் அ.தி.மு.க.வில் உள்ள அணிகளில் ஒன்றின் ஆதரவாளர்களாக தான் இருப்பார்கள்.

நான் சர்வாதிகாரி அல்ல. கட்சிககு கட்டுப்பட்டவன். ம.தி.மு.க.வை இணையதளங்கள் மூலம் விமர்சனம் செய்பவர்கள் மீது தகக நடவடிககை எடுககப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story