திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 8,813 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 8,813 பசுமை வீடுகள் கட்டப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்காக சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பயனாளியின் தற்போதைய வீடு இருக்கும் இடத்திலோ அல்லது அதே ஊராட்சியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்திலோ பட்டா வைத்திருப்பவர்களுக்கு பசுமை வீடு கட்டி தரப்படுகிறது. வீடு கட்ட ஒதுக்கப்படும் மொத்தத்தொகையான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தில் வீட்டின் கட்டுமான பணிகளுக்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், சூரிய ஒளி சக்தி விளக்குகள் அமைத்திட ரூ.30 ஆயிரமும் பிரித்து ஒதுக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் முதல்–அமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 2011–ம் ஆண்டு முதல் இதுவரை 8,813 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story