மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படும்


மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படும்
x
தினத்தந்தி 4 Sept 2017 4:45 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

சீர்காழி,

சீர்காழியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உயிர் என்பது விலைமதிக்க முடியாத ஒன்று. நினைத்தது நடக்கவில்லை என்று உயிரை மாய்த்து கொண்டால் அது மனித இனத்தையே அழித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு செயலை யாரும் செய்யக்கூடாது என்பதுதான் எனது வேண்டுக்கோள். அரியலூர் மாணவி அனிதா இறந்த துயரமான சம்பவத்தை என்னால் ஏற்று கொள்ள முடியலில்லை. எனது கண்ணீர் அஞ்சலியை மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் யார் எப்படி விவாதம் செய்தாலும், எப்படிப்பட்ட சூழலை எதிர் கொண்டாலும் எம்.ஜி.ஆர். கொடுத்துள்ள கரை வேட்டியை மாற்றி கொண்டதாக சரித்திரம் இல்லை. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய அரசு தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story