ஆறுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்


ஆறுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்: சத்குரு ஜக்கி வாசுதேவ்
x
தினத்தந்தி 4 Sept 2017 4:45 AM IST (Updated: 3 Sept 2017 11:18 PM IST)
t-max-icont-min-icon

ஆறுகளை பாதுகாத்தால் தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.

கோவை

நதிகளை காக்க வலியுறுத்தி கோவையில் நடந்த விழிப்புணர்வு பேரணி தொடக்க விழாவில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசும்போது கூறியதாவது:–

கடந்த 12 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். விவசாய பொருட் களின் விலை குறைவு, வங்கி கடன் ஆகியவை மட்டுமே காரணம் இல்லை. வறட்சிதான் முக்கிய காரணம். நமது நாட்டில் ஒரு இடத்தில் மழையால் அழிவும், மற்றொரு இடத்தில் மழை இல்லாததால் வறட்சி என்ற நிலைதான் உள்ளது. ஆறுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். நமது நாட்டில் உள்ள ஆறுகளில் ஏராளமான உயிரினங்கள் இருந்தது. ஆயிரம் வகைகளுக்கு அதிகமாக மீன்கள் இருந்தன. தற்போது அவைகள் இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

நதிகள் பாதுகாக்கப்படாததால் விவசாயம் குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் தற்போது விவசாயம் செய்து வரும் அளவில் இருந்து 60 சதவீதம் குறைந்துவிடும். விரைவில் பாலைவனமாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்க நாம் நதிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக 2 வகையில் மண் வளத்தை பாதுகாக்கலாம். மரங்களை அதிகமாக வளர்ப்பது, அதன் மூலம் விலங்குகளின் கழிவுகளை மண்ணில் சேர வைப்பது. அப்படி செய்தால் நீர் வளமும், மண் வளமும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story