உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடித்த 2 பேர் கைது
உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை யாரும் பொருட்படுத்தாமல் விஷேச நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருகின்றனர். இதனால் நகர் மாசுபடுத்துவதுடன் பொதுமக்களுக்கும் பெரிதும் இடையூறு ஏற்பட்ட வருகிறது. இந்த நிலையில் உசிலம்பட்டி பேரையூர் சாலை யூனியன் அலுவலகம் முன்பு உள்ள ஒரு மண்டபத்தில், திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தடையை மீறி சாலையில் பட்டாசுகளை வெடுத்து ஊர்வலமாக வந்தனர். இதைப் பார்த்த கிராம ஊழியர் அன்புச்செழியன் சாலையில் பட்டாசு வெடிப்பது தவறு, பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவே நீங்கள் பட்டாசுகளை சாலையில் வெடிக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த துரைச்சாமிபுரம் புதூரைச் சேர்ந்த சோலை மகன் முத்துப்பாண்டி(வயது 43), பால்சாமி மகன் பாண்டி(40) ஆகியோர் கிராம உதவியாளரை தகாதா வார்த்தைகளால் திட்டி, அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனராம். இதுகுறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி, பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மண்டப உரிமையாளரை அழைத்து, நிகழ்ச்சிகள் நடக்கும் போது பட்டாசு வெடிப்பதை தடுக்கவும், இதுபோன்று வரும் காலங்களில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.