எண்ணூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்


எண்ணூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Sept 2017 3:00 AM IST (Updated: 4 Sept 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் நேரு நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் நேரு நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க ஊழியர்கள் வந்தனர்.

இதனைப்பார்த்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில், பள்ளிக்கூடங்கள் உள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது எனக்கூறி கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story