மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு நண்பரின் கதி என்ன?


மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு நண்பரின் கதி என்ன?
x
தினத்தந்தி 5 Sept 2017 4:45 AM IST (Updated: 5 Sept 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அலையால் இழுத்து செல்லப்பட்ட அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் பொத்தேரியை சேர்ந்தவர் விஜய்(வயது 19). இவர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் கார்த்திக்(20). சென்னை தி.நகரில் உள்ள துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சென்றார். அங்கு உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்தனர். இதனை தொடர்ந்து இருவரும் கடலில் குளித்தனர்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலை 2 பேரையும் கடலுக்குள் ஆழமான பகுதிக்கு இழுத்து சென்றது. சில மணி நேரத்தில் விஜய் இறந்த நிலையில் கரை ஒதுங்கினார். அவர் கடல் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

ஆனால் அலையால் ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்ட கார்த்திக்கின் கதி என்ன என்பது தெரியவில்லை? அவரை கடலோர காவல் படை உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story