கந்திகுப்பத்தில் 4 பேர் பலியான சம்பவம்: விபத்தை தடுப்பது குறித்த ஆலோசனைக்கூட்டம்
கந்திகுப்பத்தில் நடந்த விபத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து அங்கு விபத்தை தடுப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். இதனால் அங்கு மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினார்கள். இந்த நிலையில் அப்பகுதியில் விபத்துகள் நடைபெறாமல் தடுப்பது குறித்து ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு உதவி கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் தேவிரெட்டி வெங்கட், பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கந்திகுப்பம் முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்மணி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சார்பில் அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில், கிருஷ்ணகிரி - சென்னை சாலையில் வேகமாக வரும் பஸ்கள், கார்களால் கந்திகுப்பத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க நடவடிக்கை வேண்டும் என்று கூறியிருந்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மேம்பாலம் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து விபத்துகளை தடுக்க தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் உடனடியாக கந்திகுப்பத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைப்பது, சாலையின் இருபுறத்திலும் இரண்டு இடங்களில் இரும்பு தடுப்புகள் (பேரிகார்டு) அமைப்பது, விளக்குகள் எரியும் படியான வைப்ரேட்டர் மார்க்கர் அதிக அளவில் அமைப்பது. இவை அனைத்தும் உடனடியாக அமைக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஒப்புக்கொண்டார்.
அத்துடன் மேம்பாலம் அமைக்க கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமாரிடம் கடிதம் பெற்று, அதை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து உதவி கலெக்டர் அருண் கூறியதாவது:-
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு கலெக்டர் அறிவுரைப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story