சென்னை வேளச்சேரியில் உள்ள ஆம்னி பஸ் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி சிக்கியது
சென்னை வேளச்சேரி, சீத்தாபதி நகரில் வசித்துவருபவர் தமிழன். ஆம்னி பஸ் அதிபரான இவரது வீட்டில் அதிக அளவில் பணம் பதுக்கிவைத்து இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.
ஆலந்தூர்,
இதையடுத்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் தனிப்படையினர் தமிழன் வீட்டில் திடீரென சோதனை செய்தனர். அப்போது வீட்டில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக ரூ.2 கோடி இருந்தது.
இந்த பணத்துக்கு முறையாக கணக்கு காட்டியிருப்பதாக ஆம்னி பஸ் அதிபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் வேளச்சேரி போலீசார் பணத்தை கைப்பற்றி சென்னை வருமான வரி துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story