மயிலாடுதுறை அருகே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நீடூரில், அரியலூர் மாணவி அனிதா சாவுக்கு நீதி விசாரணை வேண்டியும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் அப் பகுதி மக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
‘நீட்’ தேர்வை அமல்படுத்தி மருத்துவம் படிக்கும் மாணவ-மாணவிகளின் எதிர்காலத்தை வீணாக்கிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மயிலாடுதுறை-மணல்மேடு சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story