தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொலை மிரட்டல் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கம், லோகையா காலனியில் வசித்து வருகிறார்.
பூந்தமல்லி,
கடந்த சில தினங்களாக தமிழிசை சவுந்தரராஜன் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர் அவரை ஆபாசமான வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்து வந்தார்.
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜனின் வக்கீல் தங்கமணி விருகம்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அந்த மர்மநபர் பேசிய செல்போன் எண்ணையும் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மர்மநபர் பேசிய எண் 3 இலக்க எண்களாக இருந்தது. எனவே ஆன்லைன் மூலம் பேசி மிரட்டல் விடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஏற்கனவே மிரட்டல் விடுத்தபோது அந்த எண்ணை வைத்து விசாரித்தபோது துபாயில் இருந்து பேசியது தெரியவந்தது. தற்போதும் அதே எண்ணில் இருந்துதான் மிரட்டல் வந்துள்ளதா? கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.