ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்த பேராசிரியர்கள்
தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் ஆசிரியர் தினத்தை நேற்று புறக்கணித்தனர்.
ஊட்டி,
தமிழ்நாடு கல்லூரி பேராசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் ஆசிரியர் தினத்தை நேற்று புறக்கணித்தனர். அவர்கள் கருப்பு பட்டை அணிந்து வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தனர்.
இது குறித்து மண்டல துணைத்தலைவர் ஜெயபாலன் கூறியதாவது:–
அரசு பணியாளர்களுக்கு ஊதியக்குழு நடைமுறையில் உள்ளது. ஆனால், கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதியக்குழு அமல்படுத்தப்பட வில்லை. எனவே, கல்லூரி பேராசிரியர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின்படி புதிய ஊதிய விகிதங்களை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும். உயர்கல்வி மற்றும் கல்லூரி பேராசிரியர் விரோத கொள்கைகளை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து, ஆசிரியர் தினத்தை புறக்கணித்து கருப்புபட்டை அணிந்து பணி செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.