‘நீட்’ தேர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2017 4:00 AM IST (Updated: 6 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாணவி அனிதா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழ கத்துக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடலூர்,

‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து மனவருத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து தமிழ கத்துக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நகர இணை செயலாளர் விருமாண்டி தலைமை தாங்கினார். நகர செயலாளர் அமித்கான், வக்கீல் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்ட செயலாளர் கேதீசுவரன், சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.மோகன்தாஸ், மாவட்ட பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் பேசினர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதையடுத்து மாணவி அனிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story