அசல் உரிமம் கட்டாயத்துக்கு எதிர்ப்பு டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


அசல் உரிமம் கட்டாயத்துக்கு எதிர்ப்பு டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 7:45 PM GMT)

வாகனம் ஓட்டுவோர் அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

வாகனம் ஓட்டுவோர் அசல் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.500 அபராதம்அல்லது 3 மாதம் சிறை தண்டனைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று(புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உத்தரவை வாபஸ் பெற வலியுறுத்தியும் மாநில அரசை கண்டித்தும், சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ டிரைவர்கள் சங்க மாவட்ட தலைவர் வீரசதானந்தன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் தேவா பேசினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள்.சசிக்குமார், பிச்சைக்கனி, மார்க்சிஸ்டு ஒன்றிய செயலாளர் இசக்கி, கட்டுமான தொழிலாளர் ஒன்றிய செயலாளர் சந்தனம் உள்பட ஏராளமான டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

ராஜபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கிளைத்தலைவர் விஜயகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டதலைவர் பாலசுப்பிரமணியன்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த அம்மாசி, சத்திரப்பட்டி செல்வம், தளவாய்புரம் மதுரைக்கனி, மாடசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் சார்பில் மணிகண்டன், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story