அசல் ஓட்டுனர் உரிமம் விவகாரம்: எழுமலையில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்


அசல் ஓட்டுனர் உரிமம் விவகாரம்: எழுமலையில் சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-06T01:29:22+05:30)

எழுமலையில், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சி.ஐ.டி.யூ வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி,

எழுமலையில் ஓட்டுனர் உரிமத்தின் அசலை வாகனம் ஓட்டும் போது கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்பதை நீதிமன்றம் உறுதி செய்ததை கண்டித்து சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் மோட்டார் வாகனச்சட்டத்தை திருத்தாதே, ஓட்டுனர் உரிமத்தை பறிக்காதே, ஆட்டோ, வேன், வாடகை கார், லாரி மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே, உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி கோ‌ஷமிட்டனர்.

தொடர்ந்து எழுமலை பஸ்நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட ஆட்டோ–சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ, ஆட்டோ சம்மேளன மாநில பொதுசெயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அரவிந்தன், பொது செயலாளர் கண்ணன், பொருளாளர் சவுந்தர், துணைத் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர்களின் அடிப்படை உரிமையை பறிக்காதே, ஓட்டுனர் உரிமம் அசல் கொண்டு வர வேண்டும் என்ற சட்டத்தை திரும்பபெறு என்பது போன்ற கோ‌ஷங்களை முழங்கினர்.


Next Story