மராட்டிய மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஏரியில் மூழ்கி 3 பேர் சாவு
விநாயகர் சதுர்த்தி பண்டிகை, கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதையொட்டி, பொது இடங்களிலும், வீடுகளிலும் பலவித உருவங்களில் விநாயகர் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
மும்பை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இறுதி நிகழ்ச்சியாக, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி, மராட்டிய மாநிலத்தில் நேற்று பக்தி பெருக்குடன் நடைபெற்றது.
இந்த கோலாகலத்துக்கு இடையே, உயிரிழப்புகளும் நடந்தன. அவுரங்காபாத் மாவட்டம் சிவனை ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றபோது, அந்த ஏரியில் மூழ்கி 3 பேர் பலியானார்கள்.
மும்பையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிசின் அதிகாரபூர்வ இல்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட விநாயகர் சிலை, செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் கரைக்கப்பட்டது.
லால்பாச்சா ராஜா என்ற பெயரில் நிறுவப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை, லட்சக்கணக்கான பக்தர்களின் வரவேற்பை பெற்றிருந்தது. நேற்று அச்சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது, ஏராளமானோர் கலந்து கொண்டனர். மீனவர்களின் பாரம்பரிய கோலி நடனம் ஆடியபடி சென்றனர். அது பெரிய சிலை என்பதால், அரபிக்கடலில் கரைக்கப்பட்டது.

Related Tags :
Next Story